சட்டத்தை மீறியவர்களை காப்பாற்றுவதா?-ராமதாஸ்

சென்னை:சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டத்தை மறு பரிசீலனை செய்ய தமிழக அரசு மனு தாக்கல்செய்ய முடிவெடுத்துள்ளது. இது சட்டத்தை மீறியவர்களை அரசு காப்பாற்றுவதற்கு சமம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
சென்னையில் விதிகளை மீறி 75,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைஇடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் விஷயத்தில் எந்த கருணையும் காட்ட கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசு அவர்களுக்கு ஆதரவாக மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத்தை திருத்துவதுகுறித்து ஆராய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில்குழுவையும் அமைத்துள்ளது.
சட்டவிதிகளை மீறியவர்களை அரசே காப்பாற்றுவதா. இந்த நடவடிக்கையை அரசு
கைவிட வேண்டும்.